January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிகாகோவில் சுதந்திர தின அணிவகுப்பு மீது துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி!

அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 24 பேர் காயமடைந்துள்ளனர்.

சிகாகோவில் உள்ள ஹைலாண்ட் பார்க் எனும் இடத்தில் திங்கட்கிழமை சுதந்திர தின அணி வகுப்பு நடைபெற்றது.

இதன்போது அங்கு துப்பாக்கிதாரியொருவர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

அணி வகுப்பு ஆரம்பமாகி 10 நிமிடங்களில் அங்கிருந்த உயரமான கட்டிடத்தின் மேற்கூரையிலிருந்து அணிவகுப்பை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த பொலிஸார் 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை துரத்திப் பிடித்துள்ளதுடன், அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் என்ன காரணத்திற்காக நடத்தப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.