ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இதுவரையில் 950 பேர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கிலோ மீட்டர் தூரத்தில் 6.1 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன்போது பக்திகா மாகாணத்தில் கட்டடங்கள் பல இடிந்து விழுந்துள்ள நிலையில் அதில் சிக்குண்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250 ஆக காணப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.