February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 250 பேர் மரணம்!

Earth Quake common Images

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

இதன்போது பக்திகா மாகாணத்தில் கட்டடங்கள் பல இடிந்து விழுந்துள்ள நிலையில் அதில் சிக்குண்டு பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 250 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 150 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மேலும் பெருமளவானோர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடி இடிபாடுகளில் தேடுதல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று கூறப்படுகின்றது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.