November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் வென்றார்!

File Photo

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, பிரதமருக்கு ஆதரவாக 211 எம்பிக்களும், எதிராக 148 எம்பிக்களும் வாக்களித்தனர்.

பிரிட்டனில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ்  ஜோன்சன் பிரதமராக பதவியேற்றார்.

இதனை தொடர்ந்து 2020 ஆண்டு கொரோனா ஒழுங்குவிதிகள் சட்டத்தை மீறி லண்டனின் பிரதமரின் அலுவலக இல்லத்தில் விருந்துபசார நிகழ்ச்சியொன்றை நடத்தியிருந்தார்.

இது தொடர்பில் பிரதமருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்திருந்தன.
அதுபோன்று பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப்பின் இறுதி சடங்கின் போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது.

இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்து இவரை பதவி விலக்க வேண்டும் என்று அவரின் கட்சியை சேர்ந்தவர்களே போர் கொடி தூக்கினர்.

இவ்வாறான நிலைமையிலேயே நேற்று பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மொத்தம் உள்ள 359 எம்.பிக்களில், 211 எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் 148 எம்.பிக்கள் அவருக்கு எதிராகவும் வாக்களித்தனர்.

இதில் பெரும்பான்மை அடிப்படையில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெற்றி பெற்றுள்ளார்.