நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயமொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்திலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை விசேட ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பலரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய குழு யார் என்று அடையாளம் காணப்படவில்லை.
இதுவொரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குலாக இருக்கலாம் என்று நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.