அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி பிரசார கூட்டத்தில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுடன் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இணைந்து கொண்டுள்ளார்.
இது மீண்டும் பழைய காலம் திரும்பியது போல உள்ளது என தெரிவித்துள்ள பிபிசி, 2016 ஐப் போல டொனால்ட் டிரம்பிற்கு அதிர்ச்சி வெற்றி கிடைப்பதை தடுப்பதற்காக இருவரும் இணைந்து கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவி வகித்த காலத்தில் ஜோ பைடனுடன் நெருக்கமான உறவு காணப்பட்டிருந்தது. எனினும் தற்போது இருவரினதும் பணியும் மாறியுள்ளது.
தனது முன்னைய நெருங்கிய சகா வெள்ளை மாளிகைக்குள் நுழைவதை உறுதி செய்வதற்காக ஒபாமா இறுதி பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்.