
துருக்கியில் பூகம்பம் நிகழ்ந்து 18 மணித்தியாலங்களுக்கு பின்னர் இடிபாடுகளுக்குள் இருந்து தாயொருவரையும் மூன்று பிள்ளைகளையும் மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
பூகம்பம் காரணமாக தரைமட்டமாகியுள்ள இஜ்மிர் நகரிலேயே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் மேலும் 180 பேர் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள், நான்காவது குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.
இஜ்மீரில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதுடன், 885 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் ஏற்பட்ட சிறிய அதிர்வுகளால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அதிகாரிகள்,தரைமட்டமாகியுள்ள பல கட்டிடங்களில் தேடுதல்கள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.