January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெக்சாஸில் துப்பாக்கிச் சூடு: 18 சிறுவர்கள் மரணம்!

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அங்கு வந்த 18 வயதுடைய ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அங்கு சென்ற பொலிஸார் துப்பாக்கிதாரியை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை 11:32 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போத இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் ஏ-ஆர் 15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலில் 18 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெக்சாஸ் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினார் என்று விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.