Photo: Facebook/ Anthony Albanese
அவுஸ்திரேலியாவின் பிரதமருக்கான தேர்தலில் தொழில் கட்சி தலைவர் அந்தோனி அல்பனீஸ் வெற்றிபெற்றுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மே 21 ஆம் திகதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்கொட் மொரிஷன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தோனி அல்பனீஸ் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் 151 இடங்களில் பெரும்பான்மையான இடங்களில் தொழில் கட்சி தலைவர் அந்தோனி அல்பனீஸின் வெற்றி உறுதியாகியுள்ளது.
குறிப்பாக வெற்றி பெற 76 இடங்களே தேவை என்ற நிலையில் இதுவரையில் வெளியாகியுள்ள வாக்கு எண்ணிக்கையின் முடிவுக்கு அமைய 72 உறுப்பினர் இடங்களை தொழில் கட்சி கைப்பற்றியுள்ளதுடன், 55 இடங்களில் லிபரல் கட்சி வென்றுள்ளது.
இதன்படி அந்தோனி அல்பனீஸின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தொழில் கட்சி ஆதரவாளர்களில் நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Thank you Australia. pic.twitter.com/58ZHJCRIlO
— Anthony Albanese (@AlboMP) May 21, 2022