January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரான்ஸ் ஜனாதிபதியாக மீண்டும் இம்மானுவல் மக்ரோன்

பிரான்ஸின் ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவல் மக்ரோன் வெற்றி பெற்றுள்ளார்.

முதல் சுற்று தேர்தல் ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெற்றது. இதில் இம்மானுவல் மக்ரோனுக்கும் அவரை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி வேட்பாளரான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் இரண்டாம் சுற்று தேர்தல் ஏப்ரல் 24ஆம் திகதி நடைபெற்றது.

இதில் இம்மானுவல் மக்ரோன் 58.2 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 41.8 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன்படி இரண்டாவது முறையாகவும் இம்மானுவல் மக்ரோன் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

இவர் 2017 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இந்நிலையிலேயே தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள இமானுவல் இம்மானுவல் மக்ரோனுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.