யுக்ரைனின் லிவிவ் நகர் மீது ரஷ்யப் படையினர் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அங்கு தாக்குதல்களில் சிக்கி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரண்டு மாதங்களை நெருங்கும் நிலையில், தொடர்ந்தும், ரஷ்யா யுக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
தலைநகர் கீவ்வில் இருந்து ரஷ்ய படையினர் பின்வாங்கியிருந்தாலும். மற்றைய நகரங்களில் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை மேற்கு யுக்ரைன் நகரமான லிவிவ் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
யுக்ரைனில் மிகவும் பாதுகாப்பான நகரமாகவே லிவிவ் நகரம் கூறப்பட்டு வந்தது.
ஆனால் அந்த நகரத்தின் மீது ரஷ்யப் படையினர் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு இதுவரையில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக. லிவிவ் மேயர் ஆண்ட்ரி சாடோவி தெரிவித்துள்ளார்.