October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டது!

யுக்ரைன் மீதான படையெடுப்பை தொடர்ந்து, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை ஐநா பொதுச் சபை இடைநீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பில் ஐநா பொதுச் சபையில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 93 நாடுகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், 24 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

யுக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, யுக்ரைனில் சர்வதேச சட்டங்களை மீறுவதுடன், மனித உரிமைகளை மீறும் நடவடிக்கையிலும் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையிலேயே ஐநாவில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.