January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒஸ்கார் மேடையில் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்!

ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வென்ற வில் ஸ்மித், விழா மேடையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

94 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழக்கமான பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார்.

அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக சில கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார்.

இதன்போது ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.

இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பின்னர் அவர் தனது இருக்கைக்குத் திரும்பி, “என் மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து விலக்கிவிடு” என்று கூறினார்.

இவ்வாறு நடிகர் வில் ஸ்மித்தின், நிகழ்ச்சித் தொகுப்பாளரை அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விருது பெற்ற பின்னர் உரையாற்றும் போது நடந்த சம்பவத்திற்கு ஸ்மித் வருத்தம் தெரிவித்திருந்தார்.