photo: Twitter/The White Helmets
துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி நால்வர் பலியாகியுள்ளனர். 120க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஏஜியன் கடலை அண்டிய இஸ்மிர் மாகாணத்தில், சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கியின் இஸ்தான்புல் மற்றும் கிரீஸின் ஏதென்ஸ் நகரங்கள் வரையில் உணரப்பட்டுள்ளன.
7.0 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் பெருமளவிலான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. திடீரென அதிர்ந்த கட்டடங்களிலிருந்து பீதியடைந்து வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
கிரீஸின் சமோஸ் தீவிலும் சிறிய அளவிலான சுனாமியை உருவாக்கிய இந்த நிலநடுக்கத்தால் கரையோர பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு 8 பேர் காயமடைந்துள்ளனர்.