January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவில் 133 பயணிகளுடன் விமானம் விபத்து!

சீனாவில் 133 பயணிகளுடன் பயணித்த போயிங் – 737 பயணிகள் விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி பயணித்த ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது விமானத்தில் 133 பயணிகள் இருந்துள்ளதாகவும், இவர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் வெளியாகவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் பின்னர் அங்குள்ள காட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.