January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துறைமுக நகர் மரியுபோலை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தும் ரஷ்யா!

யுக்ரைன் மீது 26 ஆவது நாளாகவும் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்ய படையினர் துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றுவதற்காக அதனை சுற்றி வளைத்துள்ளனர்.

தற்போது அந்த நகர் மீது ரஷ்ய படையினர் கண்மூடித்தனமாக பயங்கரமான ஆயுதங்களை கொண்டு தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இதனால் அந்த நகரத்தில் உள்ள மக்கள் வெளியேற முடியாது சிக்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

யுக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அதிகமாக ரஷ்யன் மொழி பேசுபவர்களை கொண்ட மரியுபோல் நகரை கைப்பற்றினால் ஏற்கனவே கைப்பற்றி தங்களுடன் இணைத்துள்ள கிரிமியாவிற்கு தமது படைகள் சென்று வர முக்கிய வழித்தடமாக மாறிவிடும் என்று ரஷ்யா எண்ணுகின்றது.

இந்நிலையில் யுக்ரைன் இராணுவ வீரர்கள் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, சரணடைய வேண்டும். இல்லையெனில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

ஆனால், நாங்கள் எந்தநிலையிலும் சரணடைய மாட்டோம் என்று யுக்ரைன் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாம் ரஷ்யாவுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மரியுபோல் நகரில் 4 இலட்சம் மக்கள் போதுமான குடிநீர், உணவு இல்லலாமல் தவித்து வருகிறார்கள் எனவும் இதனால் ரஷ்யா தாக்குதல்களை நிறுத்தி இழப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும் யுக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.