Photo: Twitter/ MissWorldTime
2021ஆம் ஆண்டின் உலக அழகியாக போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா மகுடம் சூடியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டிருந்த 70ஆவது உலக அழகிப் போட்டி போட்டி தற்போது நடைபெற்றுள்ளது.
போர்ட்டோ ரிகாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றிருந்தனர்.
இதில் அமெரிக்கா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, வட அயர்லாந்து மற்றும் கோட்டே டி ஐவரி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அழகிகளை பின்னுக்குத் தள்ளி போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா, உலக அழகி மகுடத்தை சூடினார்.
Miss World 2021 is Karolina Bielawska from Poland.
1st Runner Up – Shree Saini from United States
2nd Runner up – Olivia Yace from Côte d’Ivoire.#MissWorld #MissWorldTime #MissWorld2021 #MW2021 #MW21PR #MissWorldPuertoRico #MWPuertoRico #MWPuertoRico2021 #PuertoRico pic.twitter.com/GdchT8GDV6— Miss World 2023 (@MissWorldTime) March 17, 2022
இதேவேளை அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய-அமெரிக்கரான ஸ்ரீ சைனி இரண்டாவது இடத்தையும், கோட்டே ஐவரியைச் சேர்ந்த ஒலிவியா யேஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.