ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ள நிலையில், இது தொடர்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யுக்ரைன் மீதான தாக்குதல்களை தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்ததுடன், பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களது சேவைகளை நிறுத்திக்கொண்டது.
இதேவேளை சமீபத்தில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடைவிதித்தது.
இந்தநிலையில் இது குறித்து எச்சரிக்கை விடுத்து ரஷ்ய அதிபர், இவ்வாறாக பொருளாதார தடைகளை விதிப்பது உலக நாடுகளில் உணவுப் பொருட்களின் விலையில் பெரும் தாக்கத்தை செலுத்தும் என்று கூறியுள்ளார்.
”ரஷ்யா உலகின் முக்கிய உர உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது உலகளாவிய வினியோக சங்கிலிக்கு மிகவும் அவசியம். இதற்கு எதிரான பொருளாதார தடைகள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்திவிடும்” என்று கூறியுள்ளார்.