October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேச்சுவார்த்தை தோல்வி: கீவ், கார்கிவ் நகரங்களை ரஷ்யப் படை சுற்றிவளைத்தது!

ரஷ்யா – யுக்ரைன் இடையில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தள்ளது.

யுக்ரைன் மீது இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்ய படையினர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இருநாடுகளின் உயர்மட்ட குழுவான வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேற்று துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்போது, தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை உடனே ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று யுக்ரைன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், அதனை ரஷ்யா ஏற்க மறுத்துள்ளது.

இதேவேளை யுக்ரைன் தரப்பில் மேலும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும், அதனையும் ரஷ்யா மறுத்துள்ளது.

இதனையடுத்து இருதரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், யுக்ரைனில் 16 ஆவது நாளாக தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்ய படையினர் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகிய நகரங்களை கைப்பற்றுவதற்காக அங்கு தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே சில நகரங்களை ரஷ்ய படையினர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், தற்போது கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களை கைப்பற்றுவதற்காக அதனை ரஷ்ய படையினர் தற்போது சுற்றிவளைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் யுக்ரைன் படையினரும் ரஷ்ய படையினர் மீது பதில் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மனிதாபிமான அடிப்படையில் கீவ் உள்ளிட்ட 5 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தாலும், அதையும் மீறி தாக்குதல் நடத்தி வருவதாகவே யுக்ரைன் குற்றஞ்சாட்டி வருகின்றது.