Photo: Twitter/ University of Maryland School
உலகில் முதலாவதாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியிருந்த நபர் மூன்று மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழுவினால், நீண்ட காலமாக இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 57 வயதான ஒருவருக்கு கடந்த ஜனவரி 11 ஆம் திகதி இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏழு மணித்தியாலங்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அவருக்கு பன்றியின் இதயத்தை மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக பொருத்தியிருந்தது.
இவ்வாறு இதய மாற்று சிகிச்சைக்கு உள்ளான நபர் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவர், மார்ச் 09 ஆம் திகதி மரணமடைந்ததாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.