November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நேட்டோவில் இணைய மாட்டோம்”: யுக்ரைன் அதிபர்

நேட்டோ அமைப்பில் சேரவேண்டும் என்று நாங்கள் விரும்பிய போதும், நேட்டோ அதனை ஏற்க விரும்பவில்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டோம் என்று யுக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரண்டு வாரங்கள் ஆகும் நிலையிலும், நேட்டோ எங்களுக்கு பெரிய அளவில் உதவிகள் எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நேட்டோ அமைப்பில் எங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளுங்கள் என்று கேட்க மாட்டோம் எனவும் யுக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் யுக்ரைனை, ரஷ்யாவால் ஒரு போதும் வீழ்த்த முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபரால் யுக்ரைனில் ஒரு நகரத்தை கைப்பற்ற முடியும். ஆனால் அவரால் முழு யுக்ரைனையும் கைப்பற்ற முடியாது என்று அமெரிக்க அதிபர், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதேவேளை ரஷ்ய படையினர் யுக்ரைனில் பின்னடைவை சந்தித்து வருவதாக அமெரிக்காவின் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.