October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் அமெரிக்கா!

யுக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

யுக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.
இந்தப் போரை நிறுத்தும்படி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பதுடன், அங்கிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் இறக்குமதிக்கும் தடை விதிக்க வேண்டும் என்று யுக்ரைன் அதிபர் மேற்குலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில், இது தொடர்பில் அறிவித்துள்ள அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இனி தாம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் மற்றும் ஏரிவாயுக்கு நெருக்கடி நிலைமை ஏற்படக் கூடும் என்பதுடன், அங்கு அவற்றின் விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.