யுக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்ய படையினர், தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் உள்ளிட்ட பிரதான நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பிட்ட நகரங்களில் மக்கள் வெளியேறும் வகையில், தற்காலிக போர்நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ள போதும், அந்த நகரங்களின் மீது தொடர்ந்தும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுவதாக யுக்ரைன் அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இதேவேளை யுக்ரைனின் மற்ற நகரங்களையும் ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து தாக்குதல்ககளை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கார்கிவ் அருகே இரு தரப்பு படையினருக்கும் இடையில் நடந்த சண்டையின் போது, யுக்ரைன் படையினரின் தாக்குதலில் ரஷ்ய படையின் மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோ கொல்லலப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ரஷ்ய படையின் மேலும் சீல மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளனர் எனவும் யுக்ரைன் அதிகாரிகளை ஆதாரம் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.