January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நான் எந்த நாட்டுக்கும் ஓடவில்லை”: வதந்தி குறித்து ஜெலன்ஸ்கி!

File Photo

தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும் தான், யுக்ரைனிலேயே இருக்கின்றேன் என்றும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படையினர் யுக்ரைனில் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், யுக்ரைன் அதிபர் அந்நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் அந்தத் தகவலை மறுத்துள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, தான் எங்கேயும் ஓடவில்லை என்று சமூக வலைத்தளங்கள் ஊடாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

‘நான் கீவ் நகரில்தான் இருக்கிறேன். இங்கிருந்துதான் எனது பணிகளை மேற்கொள்கிறேன்’ என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கீவ் நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படையினர் அங்கு தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.