யுக்ரைன் மீது தொடர்ந்தும் 9 ஆவது நாளாக ரஷ்ய படையினர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அங்குள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் பெரியதாக கருதப்படும் ஸப்போரிஷியாவிலுள்ள அணு உலை மீது ‘ஷெல்’ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் அங்கு தீயேற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக யுக்ரைன் அவசரகால சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அங்கு பெரியளவில் சேதமெதுவும் ஏற்படவில்லை என்றும், அணு உலை சேதமடைந்திருந்தால் அதனை அண்மித்த பிரதேசங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அதனால் அங்கிருந்த கட்டடங்களில் ஒன்றான ஐந்து மாடி பயிற்சி கட்டடத்திலேயே தீ பரவியுள்ளதாக அதிகாரிகள் தெதரிவித்துள்ளனர்.
இதனால் அணு உலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று யுக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Zaporizhzhia NPP is under fire! The entire Europe is at risk of a repeat of the nuclear catastrophe. Russians must stop fire! pic.twitter.com/P46YxKZZ0W
— Михайло Подоляк (@Podolyak_M) March 4, 2022