January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்: வாக்களிப்பில் இருந்து இந்தியா, இலங்கை விலகல்!

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யுக்ரைன் மீதான தாக்குதல்கள் குறித்து ஐநா பொதுச் சபையில் நடைபெற்ற அவசர கூட்டத்தின் போது, யுக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தி, அங்கிருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன்போது, 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பொதுச் சபையில் 141 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், 5 நாடுகள் எதிராக வாக்களித்தன.

இதேவேளை இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட 34 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

எனினும் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கும் யுக்ரைனுக்கும் இடையிலான மோதலை அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்தம் மற்றும் பிற அமைதியான வழிமுறைகள் மூலம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஐநா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்யா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது. ஆனால் ஐநா பொதுச்சபையில் எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரம் கிடையாது என்பதால் குறித்த தீர்மானம் நிறைவேறியுள்ளது.