மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்களால் மிகுந்த அழிவு ஏற்படும் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்த எச்சரிக்கை உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுக்ரைனை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்துவதால் யுக்ரைனில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டைப் பாதுகாக்க யுக்ரைன் படையினர் கடுமையாக போராடிவருவதுடன், தமது நாட்டுக்குள் நுழைந்த 6000 ரஷ்ய படையினரை கொன்றுள்ளதாக யுக்ரைன் பாதுகாப்பு படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலைமையில் யுக்ரைனுக்கு நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.
இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர், யுக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். மூன்றாம் உலகப்போரில் அணு ஆயுதங்களே அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.