January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைனின் கீவ், கார்கீவ் நகரங்களில் கடும் மோதல்: பலர் பலி!

Photo: Twitter/ DSNS.GOV.UA

யுக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படையினர், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களை கைப்பற்றும் நோக்கில் அங்கு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் போது ரஷ்ய படையினர் அந்த நகரங்களின் முக்கிய கட்டடங்கள் மீது ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல்கள் காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது அந்த நகரங்களில் கட்டடங்கள் பல தரைமட்டமாகியுள்ளதுடன், மேலும் பல கட்டடங்களில் தீ ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய கார்கீவ் நகர் மீது நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 112 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த நகர மேயர் தெரிவித்துள்ளார்.

அங்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் கடுமையான சண்டைகள் இடம்பெற்று வருவதாக மேயர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதான நகரங்களுக்குள் பரசூட் மூலம் ரஷ்ய படையினர் இறங்கி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.