யுக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இரு நாடுகளின் அதிகாரிகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளனர்.
இதன்படி ரஷ்யா மற்றும் யுக்ரைன் அதிகாரிகள் குழுக்கள் பெலாரஸ் சென்றடைந்துள்ளன.
யுக்ரைன் மீது ரஷ்யா ஐந்தாவது நாளாகவும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதனால் யுக்ரைன் பேரழிவுகளை சந்தித்து வருகின்றது. எனினும் பதிலுக்கு யுக்ரைன் படையினரும் ரஷ்ய படையினர் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆயுதங்களை வைத்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ரஷ்யா அறிவித்திருந்தது. ஆரம்பத்தில் அதற்கு யுக்ரைன் இணங்காத போதும் பின்னர் அதற்கு இணங்கியுள்ளது.
நிபந்தனையின்றி தாம் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தயார் என்று யுக்ரைன் அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இதன்படி யுக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம் ரஷ்ய அதிகாரிகளும் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இரண்டு தரப்பினரும் இன்றைய தினத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.