January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜூடோ கூட்டமைப்பின் கெளரவத் தலைவர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் புட்டின்!

சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கெளரவத் தலைவர் மற்றும் தூதுவர் பதவியில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் விளையாட்டு நிர்வாகக் குழு அவர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் அறிவித்துள்ளது.

யுக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்தே ஜூடோ கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெறவிருந்த கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை இரத்துச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காப்புக் கலையான ஜூடோவில் கறுப்புப் பட்டியை பெற்றுள்ள புட்டினுக்கு 2008 ஆம் ஆண்டில் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கெளரவத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது.