September 10, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது புத்திசாலித்தனம் அல்ல”: டிரம்ப்

யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் உலகத் தலைவர்கள் அமைதி காத்து வருவது குறித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

யுக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆனால் நேட்டோ படைகளை யுக்ரைனுக்கு அனுப்ப மாட்டோம் என்று நேட்டோ நாடுகள் தெரிவித்து வருகின்றன.

எனினும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் பல முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் புளோரிடா மாநிலம் ஒர்லாண்டோவில் நிகழ்வொன்றில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், ”அமெரிக்க தேர்தலில் முறைகேடு நடைபெறாமல் இருந்திருந்தால், இதுபோன்று பயங்கரமான பேரழிவு நிகழ்ந்திருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யுக்ரைன் விடயத்தில் உலகத் தலைவர்கள் அமைதி காத்து வருவது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

”ரஷ்யாவை துண்டு துண்டாக்கியிருக்க வேண்டும். இல்லையெனில், குறைந்த பட்சம் உளவியல் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாக்கி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். ஆனால், நேட்டோ நாடுகள் பொருளாதாரத்தடைகள் விதித்திருப்பது புத்திசாலித்தனம் அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் ரஷ்ய அதிபர் புத்தியசாலி எனவும், ஆனால் எங்களின் தலைவர்கள்தான் ஊமைகளாக இருக்கின்றனர் என்றும் டொனால்ட் டிரம்ப், விமர்சித்துள்ளார்.