January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைனுக்கு நாடுகள் பல உதவி: தலைநகரில் பற்றி எரியும் எண்ணெய்க் கிடங்கு!

யுக்ரைனில் ரஷ்ய படையினர் நான்காவது நாளாகவும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

வான், கடல், தரை என அனைத்து வழிகளிலும் ரஷ்ய படையினர் மும்முனைத் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு யுக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்த போதும், யுக்ரைன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் யுக்ரைன் மீது அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரஷ்ய படையினருக்கு அதிபர் விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டள்ளார்.

இதன்படி ரஷ்ய படையினர் முன்னெடுக்கும் தாக்குதல் நடவடிக்கைகளினால் யுக்ரைனில் நகரங்கள் பலவற்றில் கட்டங்கள் பல இடிந்து தரை மட்டமாகியுள்ளன.

தற்போது யுக்ரைன் அதிபர் மாளிகையை கைப்பற்ற தலைநகர் கிவ் நோக்கி ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல் தாங்கிகள் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் எண்ணெய் கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்து வருவதாக கூறப்படுகின்றது.

இதிலிருந்து வெளிவரும் புகை நச்சுத்தன்மையானது என்பதனால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எந்த நிலையிலும் ரஷ்யாவிடம் அடிபணிய மாட்டோம் என்று யுக்ரைன் அதிபர் கூறியுள்ளார். இவ்வாறான நிலைமையில், ரஷ்யாவுக்கு எதிராக போரிடும் வகையில் நட்பு நாடுகள் பல யுக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

மேலும் லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளினால் தமது வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கும் வகையில் ரஷ்யாவும் தனது வான்வெளியை மூடியதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.