யுக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்திற்குள் ரஷ்ய படையினர் நுழைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை முதல் யுக்ரைனில் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்ய படைகள், அங்கு பிரதான நகரங்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுன்னர்.
இந்நிலையில் இன்றைய தினம் அவர்கள் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் அங்கு தாக்குதல்களை நடத்தி நடத்தி கீவ் நகருக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுக்ரைன் இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், யுக்ரைன் இராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களில் அதிவேகமாக கீவ் நகருக்குள் நுழைந்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தன்னை குறிவைத்தே கீவ் நகருக்குள் ரஷ்ய படையினர் நுழைகின்றனர் என யுக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
என்ன நடந்தாலும் தான் கீவ் நகரத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.