January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதிலடி கொடுக்கும் யுக்ரைன்: ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியது!

யுக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் மிகப்பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு யுக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது.

ரஷ்யாவின் போர் விமானங்கள் யுக்ரைனில் பல பிரதேசங்களில் குண்டு மழை பொழிந்து வருவதாக கூறப்படுகின்றது.

இதன்போது, ரஷ்யாவின் 7 விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக யுக்ரைன் பாதுகாப்பு பிரதான கூறியுள்ளார். தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகின்றோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமது நாட்டுக்குள் நுழைந்த ரஷ்யாவின் 50 இராணுவ சிப்பாய்களை கொன்றுள்ளதாகவும் யுக்ரைன் அறிவித்துள்ளது.

யுக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்று ரஷ்ய அதிபர் அறிவித்துள்ள நிலையயில், நாங்கள் ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் என்று யுக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் அனைத்து மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும். ரஷ்யர்கள் வெளியே வந்து போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் யுக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.