யுக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் பதற்ற நிலைமையை தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு உயர்வடைந்துள்ளது.
தற்போது கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 100 டொலரை தாண்டியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த விலை மேலும் உயர்வடையும் அபாயம் காணப்படுவதாகவும், இதனால் உலக நாடுகளில் எரிபொருள் விலை பெருமளவு அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.