யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்தலை தொடர்ந்து படையினர் யுக்ரைன் மீது உடனடி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும், அங்கு குண்டு மழை பொழியும் சத்தம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இதேவேளை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என யுக்ரைன் படைகளுக்கு புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் யுக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து யுக்ரைன் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு நாங்கள் பதிலடிக் கொடுப்போம் என்று யுக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.