January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்ய – அமெரிக்க அதிபர்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு!

யுக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் சில நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்க அதிபர், யுக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்காது என்ற உறுதிமொழியை பேச்சுக்கு முன்னர் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்குக்கும் புட்டினுக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி மூலமான உரையாடல்களின் பின்னர், ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிபர்களிடையே பேச்சுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் யுக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக உளவுத்துறை தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா கூறி வருகின்றது.

ஆனால் அமெரிக்கா கூறுவதில் உண்மையில்லை என்றும், குறித்த விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் தீர்வுக்கு தாம் தயாராக இருப்பதாக புட்டின் தெரிவித்துள்ளதாகவும் பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார்.

இதன்படி யுக்ரைன் – ரஷ்யா வெளியுறவு அமைச்சர்களும் சந்திப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அத்துடன் அமெரிக்க அதிபருடன் பேசுவதற்கு ரஷ்யா அதிபர் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.