File Photo
பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
95 வயதான மகாராணிக்கு தொற்று அறிகுறிகள் இருந்த நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இதன்படி மகாராணி தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராணியின் மூத்த மகனான வேல்ஸ் இளவரசருக்கு கடந்த வாரம் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்தே மகாராணிக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை மகாராணி வசிக்கும் விண்ட்சர் கோட்டையில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.