November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைன் எல்லையோர மாகாணத்தில் குண்டுத் தாக்குதல்!

யுக்ரைன் மீது வரும் நாட்களில் தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யா தயாராகி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

யுக்ரைன் மீது படையெடுப்பதற்கான காரணத்தை உருவாக்குவதற்கும் ரஷ்யா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

எவ்வாறாயினும் யுக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க தாம் தயாராக இருக்கின்றோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியாழக்கிழமை கூறியுள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை யுக்ரைனில் எல்லையோர மாகாணமான டான்பஸில் உள்ள முன்பள்ளி மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

இந்த மாகாணத்தில் ஒரு பகுதி யுக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இதில் யுக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள லுகன்ஸ்கா என்ற நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் குறித்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்று இதுவரை உறுதியாகவில்லை. ஆனால் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகிக்கின்றது.