பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் அனர்த்தங்களில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ மாகாணத்திலேயே அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த மாகாணத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதில் பலர் மண்ணில் புதையுண்டு காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகளின் போது பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை என கூறப்படுவதுடன், தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.