November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைன் அகதிகளை ஏற்கத் தயாராகும் போலந்து

ரஷ்யா – யுக்ரைன் இடையே போர் மூண்டால் யுக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக போலந்து நாடு அறிவித்துள்ளது.

ரஷ்யா எவ்வேளையிலும் யுக்ரைனை ஆக்கிரமிக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ரஷ்யா – யுக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எல்லையில் இரு நாட்டு இராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி போர் உருவாகுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச நாடுகள் தெரிவிக்கின்றன.

இதனால் பல்வேறு நாடுகளும் தங்களது குடிமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளன. அத்துடன் அந்த நாடுகளின் தூதரகங்களும் மூடப்பட்டு வருகின்றன.

இதன்படி இந்தியாவும் அவசியமின்றி யுக்ரைனில் இருக்க வேண்டாம் என்று தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில் யுக்ரைனில் போர் ஏற்பட்டு பொதுமக்கள் அகதிகளாக வெளியேறுவார்களாக இருந்தால் அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக யுக்ரைக்கு அருகில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடான போலந்து அறிவித்துள்ளது.