File Photo
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எவ்வேளையிலும் இடம்பெறலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
யுக்ரைன் எல்லையில் படையினரின் எண்ணிக்கையை ரஷ்யா அதிகரித்து வருவதாகவும் இதனால் எவ்வேளையிலும் படையெடுப்பு நடக்கலாம் என்பதனால் எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் யுக்ரைனில் இருக்கும் தமது நாட்டு குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளும் தங்கள் குடிமக்கள் விரைவில் யுக்ரைனில் இருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளன.
இதற்கிடையில், உலக தலைவர்கள் பலரும் யுக்ரைன் தொடர்பான பதற்றத்தை தனிக்க பல்வேறு இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் பதற்ற நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.