‘குவாட்’ எனப்படும் இந்தோ – பசுபிக் வலய நான்கு உறுப்பு நாடுகளின் மாநாடு அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் என்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரைஸ் பெய்ன் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
இதேவேளை மாநாட்டில் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனும் கலந்துகொண்டிருந்தார்.
இங்கு, பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சுதந்திரமான மற்றும் திறந்த வலய பாதுகாப்பை பேணுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த மாநாட்டில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தை மற்ற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாப்பதற்கும் இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.