January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைன் விவகாரம்: பதற்றத்தை அதிகரிக்கும் ரஷ்யாவின் போர்ப் பயிற்சி!

File Photo

யுக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் அதிகளவில் நிலைநிறுத்தப்படுவதால் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையே பதற்ற நிலைமை அதிகரித்துள்ளது.

அண்மைய நாட்களாக யுக்ரைன் எல்லையில் ரஷ்யா படையினரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதேவேளை யுக்ரைன் அருகே உள்ள பெலாரசிஸ் அந்த நாட்டு படையினருடன் இணைந்து ரஷ்யா 10 நாள் போர் பயிற்சியையும் முன்னெடுத்துள்ளது.

இதனால் ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் யுக்ரைனை ஆக்கிரமிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளதுடன், யுக்ரைனில் இருக்கும் தமது நாட்டு பிரஜைகளை அங்கிருந்து வெளியேறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ரஷ்யா -பெலாரஸ் கூட்டு இராணுவப் பயிற்சியின் மூலம் ஐரோப்பிய பிராந்தியம் பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்துள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தாம் யுக்ரைனுக்கு படையெடுக்கும் நோக்கம் கிடையாது என்றும், ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் ரஷ்யா தொடர்ந்தும் கூறி வருகின்றது.