உலக நாடுகளில் இரண்டு வருடங்களாக பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபொன்று உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரோன் என கொரோனா உருமாற்றம் அடைந்துள்ள நிலையில் மேலும் இதில் திரிபுகள் உருவாகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்பக்குழுவின் தலைவர் மரியா வான்கோவ் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவும் மாறுபாடாக உள்ளது. இது கடைசி உருமாற்றமாக இருக்காது. இன்னும் உருமாற்றங்கள் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தலை துரிதப்படுத்தி, புதிய திரிபுகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மரியா வான்கோவ் குறிப்பிட்டுள்ளார்.