File Photo
கொவிட் வைரஸின் திரிபான ஒமிக்ரோன் பரவலுக்கு பின்னர் உலகம் முழுவதும் 5 இலட்சம் பேர் உயிரிழந்தள்ளதாக உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.
நிலைமை இப்படியிருக்கையில் ஒமிக்ரோனை ஆபத்தற்ற வைரஸ் என்று கூற முடியாது என்றும் சுகாதார தாபனம் கூறியுள்ளது.
உலக சுகாதார தாபனத்தின் பெருந்தொற்று இறப்புகள் தொடர்பான பிரிவின் பிரதானி, ”நவம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய ஒமிக்ரோன் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதுடன், 1.3 கோடி பேர் வரையிலானோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
திறமையான தடுப்பூசிகள் செலுத்தும் யுகத்தில் அரை மில்லியன் மக்கள் இறந்திருப்பது கவலையை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸின் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்றும், இதனால் உரிய சுகாதார முறைமைகளை பின்பற்றுவது அவசியமாகும் என்றும் உலக சுகாதார தாபனம் குறிப்பிட்டுள்ளது.