January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைன் விவகாரம்: ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா!

யுக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை நிலைநிறுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவினால் ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்ப திட்டமிட்டள்ளது.

அதிபர் ஜோ பைடன் இந்த வாரத்தில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

போலந்து, ஜெர்மனி, ருமேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறு கூடுதல் படையினரை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தாம் யுக்ரைனுக்கு படையெடுக்கும் நோக்கம் கிடையாது என்றும், ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் ரஷ்யா தொடர்ந்தும் கூறி வருகின்றது.

எனினும் ரஷ்யா யுக்ரைன் மீது படையெடுக்கலாம் என்று தெரிவிக்கும் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அது தொடர்பில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளதுடன் முன்னெச்சரிக்கையாக படை விரிவாக்கத்தை செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த படை விரிவாக்கம் அழிவை உண்டாக்கக்கூடியது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.