உலக நாடுகளில் பரவும் கொவிட் வைரஸின் திரிபுகளின் ஒன்றான ஒமிக்ரோன் ஊருமாற்றமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் 57 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் பிஏ.1, பிஏ 1.1, பிஏ.2 மற்றும் பிஏ.3 எனவும் உருமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது உலக நாடுகளில் பரவியுள்ள 96 சதவீத வைரஸ்கள் பிஏ.1 மற்றும் பிஏ 1.1 ஆகியவை எனவும், அதற்கு அடுத்த நிலையான பிஏ.2 வகை ஒமிக்ரோன் வைரஸ் 57 நாடுகளில் பரவியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த வைரஸ் குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இது எமது நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாதவகையில் ஆபத்தானதாக இருப்பதாக முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.