November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைன் விவகாரம்: ஐநா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா – ரஷ்யா கருத்து மோதல்!

யுக்ரைன் விவகாரம் தொடர்பில் ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதுவர்களிடையே கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

யுக்ரைன் எல்லைகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஐநா பாதுகாப்பு சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது ரஷ்யாவின் நகர்வுகளை அமெரிக்கத் தூதுவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

வரலாற்றில் ஐரோப்பா காணும் மிகப்பெரிய வரலாற்று படையெடுப்பு என்று அமெரிக்கத் தூருவர் கூறியுள்ளார்.

இவ்வேளையில் தமது உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா அனாவசியமாக தலையிடக் கூடாது என்று ரஷ்ய தூதுவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.