மிகப்பெரிய ஏவுகணை பரிசோதனை ஒன்றை வடகொரியா மேற்கொண்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி ஜனவரி 30 ஆம் திகதி காலை 07:52 மணியளவில் வட கொரியாவின் கிழக்குக் கடலில் இருந்து குறித்த ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டின் பின்னர் வடகொரியாவினால் ஏவப்பட்ட மிகப்பெரிய ஏவுகணை பரிசோதனையாக இது கூறப்படுகின்றது.
இதன்படி ஜனவரி மாதத்தில் மாத்திரம் வடகொரியாவினால் 7 ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டுளள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் அணுவாயுதங்களையும் பரீட்சிப்பதாக வட கொரியா மீது சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
வடகொரியாவின் இந்த செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமென்று ஐநாவும் கோரிக்கைகளை விடுத்துள்ளது. எனினும் வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.